எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

 

கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.  தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை  காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை , இராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்று இருந்தனர்.  கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை படகின் இயந்திரத்திற்கான எரிபொருள் தீர்ந்தமையால் , படகு காற்றின் திசையில் அனலைதீவு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அது தொடரில் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , மூவரையும் மீட்ட காவல்துறையினர் ஊர்காவற்துறை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply