ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் | Government advice to promote exports Chief Economic Advisor information

கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது:

ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும். அந்த வகையில் அமெரிக்கா விதித்த கூடுதல் வரி அமலுக்கு வந்ததில் இருந்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியை ஊக்குவிக்க வகை செய்யும் திட்டத்தை உருவாக்க, மத்திய நிதியமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply