ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் ஆட்டநாயகன் விருதுக்குப் பின்னர், ஐசிசி ஆடவர் டி:20 வீரர்கள் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் புள்ளிகள் சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் தொடக்க துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா.
25 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர், 931 ரேட்டிங் புள்ளியை எட்டினார்.
இது 2020 இல் இங்கிலாந்தின் டேவிட் மலான் பெற்ற 919 என்ற முந்தைய சிறந்த மதிப்பீட்டை விட 12 புள்ளிகள் அதிகமாகும்.
அபிஷேக் சர்மா, சுப்பர் 4 போட்டியில் இலங்கைக்கு எதிராக 61 ஓட்டங்களை எடுத்த பின்னர் இந்த மைல்கல்லை அடைந்தார்.
கடந்த வாரம் பங்களாதேஷுக்கு எதிராக அவர்கள் 75 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
அதேநேரம், திலக் வர்மா இலங்கைக்கு எதிராக 49 ஓட்டங்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்கா முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் (11 இடங்கள் முன்னேறி 13-வது), இந்தியாவின் சஞ்சு சாம்சன் (8 இடங்கள் முன்னேறி 31-வது), பங்களாதேஷின் சைஃப் ஹாசன் (45 இடங்கள் முதல் 36-வது இடம்) ஆகியோர் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.