ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்

ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் சுயாதீனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply