ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani insists rs 3500 should be paid for one quintal of paddy

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்​தால் ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.2,500 கொள்​முதல் விலை வழங்​கப்​படும் என்று கூறி ஆட்​சிக்கு வந்த மு.க.ஸ்​டா​லின், 2021-ம் ஆண்​டில் வழங்​கி​யிருக்க வேண்​டிய ரூ.2,500 விலையை நான்​கரை ஆண்​டு​கள் கழித்து இப்​போது தான் வழங்​கி​யிருக்​கிறார்.

உண்​மை​யில் 2021-ம் ஆண்​டில் நடை​முறை​யில் இருந்த கொள்​முதல் விலை​யை​விட திமுக வாக்​குறுதி அளித்த கொள்​முதல் விலை 32.42 சதவீதம் அதி​கமாகும். அதே அளவீட்டை கொண்டு பார்த்​தால் தற்​போது ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,311 வழங்க வேண்​டும். ஆனால், அதை​விட ரூ.811 குறை​வாக கொடுத்​து​ விட்​டு, நெல்​லுக்கு அதிக விலை கொடுத்து விட்​ட​தாக முதல்​வர் ஸ்டா​லின் தற்​பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசால் தற்​போது குவிண்​டால் ரூ.2,500-க்கு கொள்​முதல் செய்​யப்​படும் சாதாரண ரக நெல்​லுக்கு மத்​திய அரசு ரூ.2,369 விலை வழங்​கு​கிறது. அத்​துடன் தமிழக அரசு ரூ.131 மட்​டும் ஊக்​கத்​தொகை​யாக வழங்​கு​கிறது. ஒடிசா அரசு ஒரு குவிண்​டாலுக்கு ரூ.800, ஆந்​திரம் மற்​றும் தெலங்​கானா ரூ.500 வீதம் ஊக்​கத்​தொகை வழங்​கு​கின்​றன.

அதே​நேரத்​தில், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்​யப்​படும் நெல் 40 கிலோ மூட்​டைக்கு ரூ.60 வீதம் லஞ்​சம் வாங்கும் பணி​யாளர்​கள், மூட்​டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்​டு​கின்​றனர். விவ​சா​யிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும். அதே​போல, தமிழகத்​தில் சாகுபடி செய்​யப்​படும் நெல்​லில் குறைந்​தது 80 சதவீதத்தை அரசே கொள்​முதல் செய்ய வேண்​டும். கொள்​முதல் நிலை​யங்​களில் ஊழலை ஒழிக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply