இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மைதான பராமரிப்பாளருடன் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
5ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று ஓவல் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பார்iவிட்டதாக தெரிகிறது. அப்போது மைதான பாராமரிப்பாளர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக புகார் அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.இது இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஆடுகள பராமரிப்பாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் யாரிடமும் சென்று புகார் அளியுங்கள். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் நீங்கள் சொல்ல முடியாது என கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையளத்தில் வைரலாகி வருவதுடன் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.