கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில்:
புல்மோட்டை, கொக்கிளாய், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண வடமராட்சி மேற்கு பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி, டைனமைட் பாவனை மற்றும் தடைசெய்யப்பட்ட முறைகள் குறித்து நடவடிக்கைகள்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்.
கரைவலை இழுப்பதில் உழவு இயந்திரங்கள் பயன்படுத்துவதை எதிர்வரும் ஜனவரி 01 முதல் முற்றாகத் தடைசெய்யும் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
எப்போதும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
கடற்படை, பொலிஸ் மற்றும் கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து, இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாங்கள் முழுமையாக செயல்படுவோம் – என்று வலியுறுத்தினார்.


