கட்டுநாயக்க, விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது சோதனைே செயல்முறையை நெறிப்படுத்தவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தனியாங்கி சோதனை இயந்திரங்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுதல் ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
பயணிகளுக்கு மென்மையான அனுபவத்தை வழங்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் புதிய தனியாங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலைய தரை கையாளுதல் பிரிவுத் தலைவர் தீபால் பல்லேகங்கொட தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பத்தில் 08 தனியாங்கி சோதனை இயந்திரங்கள் நிறுவப்பட்டதாகக் கூறிய அவர், இப்போது மேலும் 20 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான நிலையத்தில் மொத்தம் 28 தனியாங்கி சோதனை இயந்திரங்கள் இருப்பதாகவும் கூறினார்.
