கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல் – Oruvan.com

இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையர்களில் ஐந்து பேருக்கு இரண்டு பேர் மட்டுமே கணினி பயன்படுத்தத் தெரிந்தவர்களாக உள்ளனர்.

அதாவது, நாட்டின் சனத்தொகையில் 64.1 சதவீதமானோர் கணினி பற்றிய அறிவை கொண்டிராதவர்கள் என தெரியவந்துள்ளது.

நாட்டில் கணினி அறிவு விகிதம் மிகக் குறைவாக இருப்பதுடன், இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்த விகிதம் 3.1 சதவீதத்தினால் குறைந்துள்ளதை அண்மைய ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply