வரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது.
அதன்படி, பெரஹெரா ஊர்வல வழிகளில் அனைத்து ட்ரோன் நடவடிக்கைகளும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக CAASL வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று தொடங்கிய 2025 கண்டி எசல பெரஹெரா எதிர்வரும் ஆகஸ்ட் 09 வரை தொடரும்.