திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பரட்டைக்காடு, செட்டிக்காடு பகுதிகளில் சிறுபோக நெற்செய்கையின் அறுவடை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,அப்பகுதியில் அதிகரித்து வரும் ‘ஏறி பூச்சி’ பூச்சியின் தாக்கம் காரணமாக பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தாம் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருவதாகவும், பலருக்கு கடன்சுமை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் தாக்கம் குறைவடையவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை மேலும் மோசமாவதற்கு முன்னதாக விவசாய திணைக்களம் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.