கந்தானையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனப் பொருட்கள் மீட்பு!

மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைப் போன்ற ஒரு தொகை கந்தானை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த இரசாயனங்கள் செப்டம்பர் 6 ஆம் திகதி மித்தெனிய, தலாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் ஒத்திருப்பதாகவும், அவை அவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இரசாயனக் கையிருப்புடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும், அது பரந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடையதா என்பதை அறியவும் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply