கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நாளையதினம்(18) முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாளையதினம் (18) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு 12 மணி நேரம் போராட்டம் நடத்த போவதாக குறித்த அமைப்பு கூறியுள்ளது.
இதேவேளை, புதிய இந்திய உயர் ஆணையர் தினேஷ் பட்நாயக்கின் முகத்தில் ஒரு இலக்கு இருப்பதைக் காட்டும் ஒரு சுவரொட்டியையும் குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் , இந்திய தூதரகங்கள் உளவு வலையமைப்பை நடத்துவதாகவும், காலிஸ்தானிகளை குறிவைத்து கண்காணிப்பதாகவும் குறித்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நாளையதினம் கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடவுள்ளன.