கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. 

இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10% மேலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், வீட்டு வாடகை பற்றாக்குறை மற்றும் மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட தாமதம் போன்ற பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் காரணமாக இருப்பதாகக் கருதப்படும் சூழலில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், வீட்டு வாடகைகளில் போட்டியும், வாடகை விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளது. கனடா எதிர்பார்த்ததுபோலவே, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

எனினும், வெளிநாட்டு மாணவர்கள் உள்நாட்டு மாணவர்களை விட அதிக கல்விக்கட்டணம் செலுத்துவதாகக் கருதப்படுகின்றது. அவர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததால், கல்வி நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கனடா அரசு, 2025ஆம் ஆண்டில் 437,000 புதிய அனுமதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இது, 2024ஆம் ஆண்டின் இலக்கை விட 10% குறைவாகும்.  இந்த மாற்றங்கள், கனடாவின் கல்வி துறையின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி

Leave a Reply