கனடிய ஓபனில் இருந்து விலகிய கார்லோஸ் அல்கராஸ்! – Athavan News

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் நட்சத்திரமான கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz), 2025 கனடிய ஓபனில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அவரது முடிவிற்கான காரணத்தையும் 22 வயதான ஸ்பெய்ன் வீரர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அதில் அவர், தனக்கு சிறிய தசைப் பிரச்சினைகள் உள்ளதாகவும். அடுத்து வரவிருக்கும் போட்டிகளுக்கு நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேநேரம், கனடாவில் உள்ள தனது ரசிகர்களுக்கு வருத்தம் வெளியிட்ட அல்கராஸ், அடுத்த ஆண்டு உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னரிடம் அல்கராஸ் நான்கு செட் தோல்வியடைந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

டொராண்டோவில் நடைபெறும் ATP மாஸ்டர்ஸ் 1000 போட்டி ஜூலை 27 அன்று தொடங்கும்.

உலகின் 2 ஆவது நம்பர் டென்னிஸ் வீரர் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பின்னர் மாண்ட்ரீலில் நடந்த 2024 கனடிய ஓபனையும் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply