யாழ்ப்பாணத்தில் மின்னொளியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளித்த பின்னர் வீடு நோக்கி சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளை கண்டு களித்த பின்னர் இரு இளைஞர்களும் , மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்துள்ளனர். இதன்போது பருத்தித்துறை வீதி, புத்தூர் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களையும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞனொருவர் உயிரிழந்த நிலையில் மற்றைய இளைஞன் வைத்திசாலையில் தொடர்ந்