கரூரில் அரசியல் கூட்டம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு! விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடற்கூராய்வு நிறைவடைந்த சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கரூரில் இருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் உடனடியாக விஜய் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தனது x தளத்தில் உருக்கமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பும்  வழங்கப்பட்டுள்ளது.

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் 15 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக மத்திய அரசு அவருக்கு  ‘Y’ பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 

 

நன்றி

Leave a Reply