ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து கலிபோர்னியாவின் கடற்கரையை சுனாமி அடைந்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை தொிவித்துள்ளது. மேலும் இது மாநிலத்தின் வடக்கே உள்ள அரினா கோவ் மற்றும் மான்டேரியில் தோன்றி மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரிகான் எல்லைக்கு அருகிலுள்ள கிரசென்ட் நகரில், நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கலிபோர்னியா தனது முதல் சுனாமி அலைகளைக் காணத் தொடங்கியுள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, 1 அடிக்கு மேல் அலை காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிக அலைகள் எதிர்பார்க்கப்படுகிவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் வடக்கு கலிபோர்னியாவின் கடற்கரையின் 100 மைல் நீளத்தில் அமைந்துள்ளது,
இதேவேளை ரஷ்யாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய்த் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாக பசிப்பிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் விடு்துள்ளது. இந்த சுனாமி அலைகள் இன்று 12.11 மணிக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி காலை 11:25 மணிக்கு தூர கிழக்கு ரஷ்யாவை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதனால் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பரவலான வெள்ளமும் ஏற்பட்டுள்ளது
சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து , பெரு மற்றும் மெக்சிகோ நாடுகளும் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.