கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படாது: அரசு திட்டவட்டம் – Oruvan.com

“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படமாட்டாது. வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகவே கல்வியைக்கூட எதிரணி அரசியல் ஆயதமாக்கியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“ கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவருகின்றன. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டது.

துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையிலேயே மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டோம்.

முதற்கட்டமாக தரம் ஒன்று மற்றும் 6 இல் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள இருந்தோம். எனினும், தரம் ஆறு ஆங்கில பாடதிட்டத்தில் இடம்பெற்ற ஒரு குளறுபடியை அடிப்படையாகக் கொண்டு எதிரணிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றன.

எதிரணி கூறுவதுபோல் கல்வியை நாம் ஆபாசமாக்கவில்லை.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பேரிடரிலும் அரசியல் நடத்த முற்பட்ட எதிரணி தற்போது கல்வியிலும் நடத்துகின்றது. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகும். கல்வியையும் அரசியல் ஆயுதமாக்குவதற்கு முற்பட்டனர்.

கல்வி மறுசீரமைப்பை மக்கள் வரவேற்றுள்ளனர். அதனை வலியுறுத்தி போராட ஆரம்பித்துள்ளனர். குறைபாடு இருந்தால் நிவர்த்தி செய்வோம். கல்வி மறுசீரமைப்பை கைவிடபடாது.

சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டது. அதனால்தான் தரம் ஆறு திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply