காசா பேர­ழிவைப் பற்றி நீங்கள் கவலை தெரி­வித்­தது, நீண்ட நாட்­க­ளுக்கு நினைவில் இருக்கும்

தேசிய மற்றும் உல­க­ளா­விய பிரச்­சி­னைகள் குறித்து, 2025 செப்டெம்பர் 24 அன்று ஐக்­கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆற்­றிய துணிச்­ச­லான மற்றும் கொள்கை ரீதி­யான உரைக்கு தேசிய தேசிய மற்றும் உல­க­ளா­விய பிரச்­சி­னைகள் குறித்து, 2025 செப்­டெம்பர் 24 அன்று ஐக்­கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆற்­றிய துணிச்­ச­லான மற்றும் கொள்கை ரீதி­யான உரைக்கு தேசிய ஷூறா சபை பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி தனது உரையில் உல­க­ளா­விய மக்­க­ளி­டமும் அவர்­க­ளது தலை­வர்­க­ளி­டமும் முன்­வைத்த பல முக்­கிய விட­யங்கள் குறித்து, தேசிய ஷூறா சபை 2025 செப்­டம்பர் 28, திக­தி­யிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தியின் உரையில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களை அனைத்து இலங்­கை­யர்­களும் நிச்­சயம் பாராட்ட வேண்டும் என்றும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வறுமை ஒழிப்பு, போதைப்­பொருள் மற்றும் குற்­றங்கள் எதி­ரான நட­வ­டிக்கை, ஆயு­தங்கள் மற்றும் போர்கள், காசாவில் பேர­ழிவு, பலஸ்­தீ­னர்­களின் தனி நாட்டு உரிமை, இன­வெறி மற்றும் தீவி­ர­வாதம், சகல பிர­ஜை­க­ளுக்கும் சம உரிமை போன்ற விட­யங்­களை தொட்டு ஜனா­தி­பதி பேசி­யி­ருந்­ததை குறிப்­பிட்­டி­ருந்­தது.

தேசிய ஷூறா சபை தனது கடி­தத்தில் மேலும், “பிரி­வி­னைக்கு வழி­வி­டாமல், பல்­வ­கை­மையே நமது பலம் என்று கருதி, இலங்­கையை ஒரு பல கலாசார, பல மத சமூகம் என்று நீங்கள் தெளி­வாக எடுத்­து­ரைத்­த­தற்கு நாங்கள் நன்றி செலுத்­து­கிறோம். ஒற்­று­மை­யுடன் இணைந்து வாழ்­வது பற்­றிய இந்தச் செய்தி, எங்­களைப் போன்ற நாட்டின் பல்­வேறு பிரி­வு­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைப்­பு­க­ளுக்கு மிகப் பெரிய அளவில் நம்­பிக்கை அளிக்­கி­றது.

“வறுமை மற்றும் போதைப்­பொருள் அச்­சு­றுத்­த­லுக்கு எதி­ராகக் குரல் கொடுத்து, இந்தச் சக்­திகள் நமது சமூ­கத்தின் அமைப்­பையே சீர­ழித்து, நாம் அனை­வரும் வளர்ச்சி அடையப் போவதைத் தடுக்­கின்­றன என்று நீங்கள் வெளிப்­ப­டை­யாகக் குறிப்­பிட்­டதை நாங்கள் பாராட்­டு­கிறோம்.

‘பலஸ்­தீ­னத்தில் இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொலை’ என்று நன்­க­றி­யப்­பட்ட விட­யத்­தையும், பலஸ்­தீன மக்கள் அனு­ப­விக்கும் கடு­மை­யான அநீ­தி­க­ளையும் நீங்கள் தெளி­வாகக் குறிப்­பிட்­டது, மனி­த­நேய மதிப்­பு­க­ளையும் மனித கண்­ணி­யத்­தையும் பாது­காப்­பதில் எங்கள் நாட்டின் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காட்­டு­கி­றது. காசாவில் நடக்கும் பேர­ழிவைப் பற்றி நீங்கள் இத­ய­பூர்­வ­மாகக் கவலை தெரி­வித்­ததும், உலக மக்கள் முன் உட­னடிப் போர் நிறுத்தம் மற்றும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீங்கள் அழைப்பு விடுத்­ததும் நீண்ட நாட்­க­ளுக்கு நினைவில் இருக்கும்.

ஐ.நா. பொதுச் சபையில் நீங்கள் முன்வைத்த இந்த ஊக்கமூட்டும் செய்தி, சர்வதேச சமூகத்தின் முன்னால் நமது நாட்டின் மதிப்பையும் நற்பெயரையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

நன்றி

Leave a Reply