காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் பலி

திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் இருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 02 பிள்ளைகளின் தந்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply