காற்றின் தரத்தை அறிந்துகொள்வதற்காக தேசிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
காற்றின் தரம் தொடர்பில் ஒவ்வொரு பிரஜைகளும் அறிந்துகொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.