காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கைகளை மீறி ஊடுருவ முயன்ற சந்தேகநபர்களை தடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் மோதல் இடம்பெற்றதுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி

Leave a Reply