கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதி பகுதியில், 50 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (17) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய,
முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு 14 ஐ சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

நன்றி

Leave a Reply