குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம்

குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் (Inter-American Highway) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளடங்குகின்றனர் எனத் தீயணைப்புப் படை செய்தித் தொடர்பாளர் லியாண்ட்ரோ அமடோ உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த சமயம் அந்தப் பகுதியில் நிலவிய அடர்த்தியான மூடுபனி (Dense Fog) காரணமாக வீதி சரியாகத் தெரியாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குவாத்தமாலாவில் கடந்த வாரமும் 21 பேர் விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply