கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ – கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்? | DMK new formula for allocating seats to alliance parties

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

தற்​போதைய நில​வரப்​படி 2026 சட்​டப்​பே​வைத் தேர்​தலில் அதி​முக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப்​போட்டி ஏற்​படும் சூழல் நில​வு​கிறது. ஆளும் கட்​சி​யான திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், மதி​முக, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், கொமதேக, மக்​கள் நீதி மய்​யம், இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக், தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனித நேய மக்​கள் கட்​சி, மக்​கள் விடு​தலைக் கட்​சி, ஆதித் தமிழர் பேரவை உள்​ளிட்ட கட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. இதுத​விர தேமு​திக உட்பட சில கட்​சிகளு​ட​னும் திமுக பேசி வரு​கிறது. அதே​நேரம், கூட்​டணி ஆட்​சிக்​கான பேச்​சுகள் வலுப்​ப​தால் தனி பெரும்​பான்​மை​யுடன் ஆட்​சியை தக்க வைப்​ப​தற்கு திமுக விரும்​பு​கிறது. அதற்​கேற்ப கூட்​டணி கட்​சிகளுக்​கான இடங்​கள் மற்​றும் தொகு​தி​களை ஒதுக்​கீடு செய்​வதற்கு அதன் தலைமை திட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து திமுக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸுக்கு 25, விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட்,மதி​முக ஆகிய​வற்​றுக்கு தலா 6, கொமதேக, ஐயூஎம்​எல் கட்​சிகளுக்கு தலா 3, இதர சிறு கட்​சிகளுக்கு 6 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. அதில், மதி​முக மற்​றும் சிறிய கட்​சிகள் திமுக​வின் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்​டன. இதன்​மூலம் 1989-ம் ஆண்​டுக்கு பின்பு திமுக அதி​கபட்​ச​மாக 188 தொகு​தி​களில் தனித்து களமிறங்​கியது.

அதில் 133 தொகு​தி​களில் வெற்றி பெற்றது. கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட்ட 46 தொகு​தி​களில் 26-ல் மட்​டுமே வெற்றி கிடைத்​தது. ஒட்​டுமொத்​த​மாக 159 தொகு​தி​களில் திமுக கூட்​டணி வென்​றது. இந்​நிலை​யில், வரும் சட்​டப்​பேர​வைத்தேர்​தலில் திமுக கூட்​டணி 200 தொகு​தி​களுக்கு குறை​யாமல் வெற்றி பெறு​வதற்கு இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, கூட்​டணி கட்​சிகளுக்​கான இடங்​கள் மற்​றும் தொகு​தி​கள் ஒதுக்​கீட்​டில் திமுகதலைமை கூடு​தல் கவனம் செலுத்தி வரு​கிறது. தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் உள்ளமக்​கள் நீதி மய்​யம், தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனிதநேய மக்​கள் கட்​சி, மக்​கள் விடு​தலை கட்​சி, ஆதித்​தமிழர் பேரவை தவிர மற்ற கட்​சிகள் 2019-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் இருந்து சேர்ந்து பயணிக்​கின்​றன. இதனால் அனைத்து கட்​சிகளை​யும் அரவணைத்து செல்​வதற்கு திமுக தலை​வர் ஸ்டா​லின் விரும்​பு​கிறார்.

அதே​நேரம் தேர்​தல் வெற்​றி​யில் சமரசம் செய்து கொள்​வதற்கு தயா​ராக இல்​லை. 1971-ம் ஆண்​டுக்கு பின்​னர் திமுக ஆட்​சி​யானது 2-வது முறை​யாக தக்க வைக்​கப்​பட்​ட​தில்​லை. அதை நிகழ்த்​திக் காட்ட வேண்​டுமென்ற தீவிர முனைப்​புடன் இருக்​கிறார் ஸ்டா​லின். அதனால் கூட்​டணி கட்​சிகளுக்​கான இடங்​களை குறைப்​ப​தற்கு தலைமை முடி​வெடுத்​துள்​ளது. கடந்த தேர்​தலில் காங்​கிரஸ் 25-ல் 18, விசிக 6-ல் 4 இடங்​களில் வெற்றி பெற்​றன.

ஆனால், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் 12-ல் 4 இடங்​களில் மட்​டுமே வென்​றன. ஐயூஎம்​எல் 3 இடங்​களி​லும் தோல்வி அடைந்​தது. அதனால் இந்த முறை காங்​கிரஸ் 20, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் 8, ஐயூஎம்​எல் 1 எனசீட்​கள் குறைத்து ஒதுக்​கு​வதற்கு திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. விசிக​வுக்கு மட்​டும் 8 தொகு​தி​கள் வழங்​கப்பட இருக்​கிறது. மற்ற சிறிய கட்​சிகளுக்கு சில இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டாலும் அவர்​களை உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட வைப்​ப​தற்கு தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், விசிக​வுக்கு கூடு​தல் இடம் ஒதுக்​கி​னாலும் சில தொகு​தி​களில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடும் வகை​யில் பேசி வரு​கிறோம்.

அதே​நேரம் தேமு​திக உட்பட மேலும் சில கட்​சிகள் கூட்​ட​ணி​யில் இணைந்​தால் இதில் மாற்​றங்​கள் வரும். பெரும்​பாலும் வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​கள்​தான் வழங்​கப்​படும். தேர்​தல் வெற்​றிக்​கான அனைத்து பணி​களை​யும் தி​முக முன்​நின்று மேற்​கொள்​ளும் என முதல்​வர் உத்​தர​வாதம் அளித்​துள்​ளார். அதே​போல், கடந்​த​முறை போட்​டி​யிட்ட தொகு​தி​களி​லும்​ மாற்​றம்​ வரும்​. இவ்​வாறு தி​முக வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

நன்றி

Leave a Reply