கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு!

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (7) அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply