கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சொகுசு பேருந்து  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply