மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.