சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது.
அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்த்ததுடன் சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதி இதற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.