இன்று (14) இரவு நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1. கொழும்பு – ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் (Beauty Parlour) ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்: ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடியமங்கட பகுதியில் இரவு 7.50 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் காவற்தறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
The post கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! appeared first on Global Tamil News.
