சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செட்டிக்குளம் – மாங்குளம் பகுதியில் நேற்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட
சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றில் 25 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகனை கொண்டு சென்ற இருவரை கைதுசெய்த பொலிஸார்
குறித்த சந்தேகநபர்களுக்கு உதவிய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 21, 28, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நன்றி

Leave a Reply