சட்டவிரோதமாக தங்கியிருந்த 125  சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை, சீன அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி  அனுரதபுரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து, இணையதளம் மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் குடிவரவு அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டனர்.மேலும் விசாரணையில், சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களில் நாட்டிற்கு வந்த இவர்களில் பலர், குடிவரவு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள்  வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைக்காக சீன குடிவரவு அதிகாரிகள் மற்றும் ஒரு வைத்தியர் அடங்கிய குழுவும் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் நேற்றிரவு, குறித்த 125 பேரும் சீனாவுக்கு அனுப்பப்பட்டதுடன், அவர்களுடன் இலங்கையின் குடிவரவு திணைக்களத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகளும் பயணித்துள்ளனர்.

#Deportation #ChineseNationals #OnlineFinancialScam #DepartmentofImmigrationandEmigration #Anuradhapura #SpecialFlight

நன்றி

Leave a Reply