கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.