சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம் – LNW Tamil




பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நேற்று (02) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முறையீடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த முறையீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு:

  • வாகனங்களை தவறாக பயன்படுத்தல், சட்டவிரோதமாக இரு எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளல், பாராளுமன்ற ஊடகப் பிரிவிற்கு சொந்தமான உபகரணங்களை தவறாக பயன்படுத்தல், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் பாராளுமன்ற கணக்கின் கீழ் கூடுதல் மதிய உணவு வசதிகளை பெற்றுக்கொள்ளல், சட்டவிரோதமாக விசாரணை அதிகாரியை நியமித்து, அவருக்கு பாராளுமன்ற கணக்கில் இருந்து பணம் செலுத்துவதோடு, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கல், சட்டவிரோதமாக அரசுக்கு சொந்தமான இரண்டு அதிகாரப்பூர்வ இல்லங்களை பயன்படுத்தல்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக மறுத்து, தன்னுடைய ஊழல் செயல்களை மறைக்க முயற்சித்தல், பாராளுமன்ற பணியாளர் நிர்வாகத்தில் சட்டவிரோத தலையீடு செய்தல்

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் இலக்கம் 9 எனும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் “ஊழல்” குற்றம் செய்துள்ளார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



நன்றி

Leave a Reply