பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டு மற்றும் தலைக்கவசம் அணியாமல் சென்றமை , சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றமை, நீதிமன்ற பிடியாணை உள்ள பலர் கைதானதோடு 18 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம், கல்முனை, காரைதீவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயது சந்தேக நபர் மற்றும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் என குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் திட்டமிடலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.