சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஜீப் ரக வாகன கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அவர் மதுகம நீதிமன்றில் இன்று (24) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, இந்த சர்ச்சைக்குரிய ஜீப் ரக வாகன கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனான ரஷிக விதான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply