சர்ச்சைக்குரிய நபரான நாமல் குமாரவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை இன்று (5) பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத் துறையில் (CTID) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
28.02.2022 அன்று “சாமுதிதாவுடன் உண்மை” என்ற யூடியூப் நிகழ்ச்சியில், நாமல் குமார நபிகள் நாயகம், குர்ஆன் மற்றும் இஸ்லாத்தை புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டியே இந்த விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான தனது இழிவான அறிக்கையின் மூலம், நாமல் குமார தண்டனைச் சட்டம், ICCPR மற்றும் PTA ஆகியவற்றின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
சட்டத்தரணிகளான ஆசாத், வசீமுல் அக்ரம் மற்றும் ராசி முகமது ஆகியோர் ஊவுஐனு விசாரணைக்கு ஆஜரானார்கள்.