சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் மோதல்: இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் – நடந்தது என்ன? | Muslims clash in Chidambaram

கடலூர்: சிதம்பரத்தில் கடந்த 5-ம் தேதி லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சிதம்பரம் ஜவகர் தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (45) என்பவர், அவரது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு நவாப் பள்ளிவாசல் நிர்வாகிகளும், சிதம்பரம் காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள லால்கான் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இருந்தனர்.

அவர்களிடம் முகமது இஸ்மாயில் தரப்பினர் கணக்கு வழக்குகள், சொத்து விவரங்களை கேட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து முகமது இஸ்மாயில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் செல்லப்பா என்கிற ஜியாவுதீன், மஜீத், முகமது உசேன், ஈசாக், பக்ருதீன், பினாயில் ஆரிஃப், சையது, யூசுப் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் சிதம்பரம் லால் கான் தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (51) கொடுத்த புகாரின் பேரில் முகமது இஸ்மாயில், சாகுல் ஹமீது, நகிப், சபீர், ஜமால் உசேன், பைரோஸ், நாசர், ஹசன் ஹரிப், தசீர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிதம்பரம் அண்ணா சிலை அருகே லால்கான் பள்ளிவாசலை

சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு இரு தரப்பினரும் அரை மணி நேர இடைவெளியில் சிதம்பரம் அண்ணா சிலை அருகே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமது இஸ்மாயில் தரப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது நுமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், லால்கான் பள்ளிவாசல் நிர்வாகிகளை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலை சேர்ந்த செல்லப்பா என்கிற ஜியாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் ஹலீம், முகமது அலி, மக்கின் உள்ளிட்டோர் சேர்ந்து நவாப் பள்ளி வாசலில் புகுந்து தகராறு செய்தவர்களை கண்டித்து முழக் கங்கள் எழுப்பினர். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply