சிரமதானப் பணியில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) காலை, பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்களுக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.

பலருக்கு அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றின. இதையடுத்து, குறித்த மாணளவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply