சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் எமது மனச்சாட்சியும் மிகப்பெரியது


எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை என நீதி அமைச்சர்  ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் முழு உலகையும் பாதிக்கும் ஒன்று என்பது நமக்குத் தெரியும். அதேபோல், எந்த நாட்டில் எங்கு போர் நடந்தாலும் பாதிப்பு மனித உயிர்களுக்குத்தான். அதனால்தான் எமது வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியும் கூடிய விரைவில் அமைதியை ஏற்படுத்துமாறு எப்போதும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் எமது மனச்சாட்சியும் மிகப்பெரியது. உலகில் எந்தவொரு மனிதனும் எந்தக் காரணத்திற்காகவும் இறப்பதை நாம் விரும்பவில்லை.  நாம் நடுநிலையானவர்கள், அதே சமயம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என நாடாளுமன்றத்தில் இன்று (6) இதனை தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply