சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே எனத் தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளான காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related
Share this:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to email a link to a friend (Opens in new window) Email