சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ள அண்மைய ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் மாறியுள்ளது.

இந்த தடை குறித்த அறிவிப்பினை செவ்வாயன்று (03) டுபாயில் நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கெடுத்த ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) வெளியிட்டார்.

நாடாளுமன்ற ஒப்புதல் இன்னும் தேவைப்படும் இந்தத் தடை, நிறுவன நிர்வாகிகளை அவர்களின் தளங்களில் சட்டவிரோத அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்க வைப்பது உள்ளிட்ட பல மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஆண்டு தடையை கொண்டு வந்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.

அதைத் தொடர்ந்து பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் இந்த விடயம் குறித்து பரிசீலிப்பதாக அறிவித்துள்ளன.

அதேநேரம், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடையை அமுல்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து இங்கிலாந்து அரசு ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply