சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் காலை 5:49 மணிக்கு 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன அரசாங்க நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கான்சு மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன் காயங்கள் பாரதூரமானவையாக இல்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் சுமார் எட்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.