துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (26) நடைபெறும் 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர்கள் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இதுவாகும்.
2025 ஆசியக் கிண்ணப் பயணத்தில் இந்தியா இதுவரை எதிர்கொண்ட 05 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியமான மோதலுக்கு முன்னதாக அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இலங்கையுடனான இன்றைய போட்டியில் முயற்சிப்பார்கள்.
அதேநேரம், குழு நிலைப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சரித் அசலங்க தலைமையிலான அணி, சுப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது.
இதன் விளைவாக இலங்கை அணி இன்றைய போட்டிக்கு முன்பே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் இதற்கு முன்பு 31 டி20 சர்வதேச போட்டிகளில் சந்தித்துள்ளன (ஒரு போட்டி கைவிடப்பட்டது உட்பட).
அதில் இந்தியா 21 போட்டிகளிலும், இலங்கை 09 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.