சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி தேசிய கொடியை ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு கூட்டத்தில் சென்னையில் உள்ள மகா போதி சங்கத்திலிருந்தும்,  சென்னை காளிகாம்பாள் ஆலயத்திலிருந்தும், சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் இஸ்லாமிய ஆன்மீக சான்றோர் ஆகியோர் பங்கு பற்றி வருகை தந்திருந்தவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

blank

இதனைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகர்  கணேசநாதன் கதீஈஸ்வரன் ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை வாசித்தார். அதன் பிறகு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவு குறித்தும்  தன்னுடைய வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

blank

 

நன்றி

Leave a Reply