சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 என விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.15) பவுனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,400-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.190 என குறைந்து, ரூ.11,550-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.77,120-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை ஆகிறது.
