சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம் | 93 Lakh People Travel using Chennai Metro Rail at October

மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதத்தில் 93 லட்சத்து 27 ஆயிரத்து 746 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு நம்பகத்தன்மையான, பாதுகாப்பான வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்குகிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபரில் 93 லட்சத்து 27 ஆயிரத்து 746 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

தொடர் விடுமுறை: செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேர் பயணம் செய்திருந்த நிலையில், அக்டோபரில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி என தொடர் விடுமுறைகளால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதனால், மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 17-ம் தேதி 4 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 47 லட்சத்து 59 ஆயிரத்து 171 பேர், பயண அட்டைகளை பயன்படுத்தி 77 ஆயிரத்து 236 பேர், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 44 லட்சத்து 91 ஆயிரத்து 339 பேர் பயணம் செய்துள்ளனர். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply