சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

சென்யார் (Senyar) புயல் தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகுவதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு நிலையம் வலியுறுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை அண்மித்த இலங்கை கடற்கரையில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த அமைப்பு அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஒரு சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த வார இறுதியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைகளில் பலத்த மழைக்கான வாய்ப்பு  காணப்படுவதாகவும், மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும்.

அதனால், மீனவர்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும்  இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

Image

நன்றி

Leave a Reply