2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 14,300 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இது 27.4% ஆகும்.
மேலும், செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,092 பேர், ஜெர்மனியிலிருந்து 3,488 பேர், சீனாவிலிருந்து 2,796 பேர் மற்றும் அவுஸ்திரேலியவிலிருந்து 2,603 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,618,769 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 339,895 பேர் இந்தியாவிலிருந்தும், 155,233 பேர் இங்கிலாந்திலிருந்தும், 119,132 பேர் ரஷ்யாவிலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.